மலையகத்தில் சஜித் அலை - தலவாக்கலையில் நாளைமறுதினம் திரளப்போகும் திகாவின் படை

மலையகத்தில் சஜித் அலை - தலவாக்கலையில் நாளைமறுதினம் திரளப்போகும் திகாவின் படை

மலையகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலை வீசுவதாகவும் நாளைமறுதினம் 8ஆம் திகதி தலவாக்கலையில் பிரமாண்ட பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாளைமறுதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மலையகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். 

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான தொழிலாளர் தேசிய சங்கமும், மலையக மக்கள் முன்னணியும் இணைந்து பிரமாண்ட பிரச்சார கூட்டமொன்றை நாளை மறுதினம் தலவாக்கலையில் ஏற்பாடு செய்துள்ளன. 

இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள உள்ளதாகவும் மலையக மக்களின் அபிவிருத்தியிலும் அரசியல் உரிமைகளை வழங்குவதிலும் உறுதியாக உள்ள சஜித் பிரேமாசவுக்கு மக்கள் ஆதரவளிக்க அணிதிரண்டு வருமாறு திகாம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.