உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சிறிசேன காதல் மோகத்தில் இருந்தார்! 

மைத்திரியை கைது செய்யப்படாவிடின் அடுத்த குரல் பதிவில் எனது இலக்கு நீங்களாகத்தான் இருக்கும் என டிரான் அலசுக்கு எச்சரிக்கிறேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது சிறிசேன காதல் மோகத்தில் இருந்தார்! 

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த அன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் இருந்தார்” என  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ”  மைத்திரிபால சிறிசேன இன்று நேற்று அல்ல, அன்று ஜனாதிபதியாக்கிய ரணில் விக்கிரமசிங்கவையே யாருக்கும் தெரியாமல் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் அமர்த்தியவர். ஈஸ்டர் தாக்குதல் நடந்த அன்று மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் காதல் மோகத்தில் உல்லாசமாக இருந்தார்.

இதனை நான் கூற பயப்ப மாட்டேன். அன்றும் இதையே நான் கூறினேன். பாவத்திற்கு ஜனாதிபதியான இவர்
யாராவது சிக்குவார்களா எனப் பார்க்க தற்போது ஒரு சூழ்ச்சியை மேற்கொள்கிறார். மைத்திரி மீது விசாரணை நடத்த முன்னர் அவரை கைது செய்யவேண்டும்.

அன்று கெஹெலியவை கைது செய்ததை போன்று, மைத்திரியும் சிறைக்காவலுக்கு அனுப்பவேண்டும். டிரான் அலஸ் அமைச்சரே.

மைத்திரியை கைது செய்யப்படாவிடின் அடுத்த குரல் பதிவில் எனது இலக்கு நீங்களாகத்தான் இருக்கும் என டிரான் அலசுக்கு எச்சரிக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.