சுற்றுலா வந்த பெண்ணிடம் கைவரிசையை காட்டி இலங்கையர்
சுற்றுலாப் பயணிகளால்தான் இலங்கையின் அந்நிய வருமானம் அதிகரித்து வருகிறது.
இதுபற்றிய அறிவுக்கூட இல்லாத நபர்களால் நாட்டுக்கு பாரிய இழப்புகள் ஏற்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை தடுக்கும் வகையிலான பல சம்பவங்கள் இலங்கையில் நடைபெறுகின்றன. அவ்வாறான ஒரு சம்பவம் திருகோணமலை, உப்புவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின்1,616,500 ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளன.
இந்தியப் பெண் தனது கணவருடன் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து உப்புவெளியிலுள்ள சுற்றுலா விடுதியில் 24 ஆம் திகதி தங்கியிருந்தார். மறுநாள், கடற்கரைக்கு சென்று சில மணி நேரம் கழித்து தனது அறைக்குத் திரும்பினார்.
அறையில் வைத்திருந்த கைப்பையில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கைப்பையில் இருந்து இரண்டு மோதிரங்கள், பென்டனுடன் கூடிய இரண்டு சங்கிலிகள் மற்றும் இரண்டு வெள்ளி மோதிரங்கள், 180 அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உப்புவேலி பொலிஸார் மற்றும் நிலாவேலி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை மக்களுக்கு இந்த விடயத்தில் போதியை அறிவை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கும் விடயமாகும் என்பதை உணர வேண்டும் என்பதுடன், இவ்வாறான திருட்டுச் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
Editor