சஜித்துக்கு ஆதரவு - அறிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க உள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க உள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
"தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுவின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவையும் பூரண பங்களிப்பையும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது அரசியல் குழுவின் முடிவின்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம்." என்றும் அவர் கூறினார்.
ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம்
மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Editor