வரிசை யுகத்தை இல்லாமல் செய்தோம் என்று  கூறுவோர் வயிற்றுப் பசியை போக்கவில்லை : சோ. ஸ்ரீதரன்

வரிசை யுகத்தை இல்லாமல் செய்தோம் என்று கூறுபவர்களால் நாட்டு மக்களின் வயிற்றுப் பசியை இன்னும் போக்க முடியவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

வரிசை யுகத்தை இல்லாமல் செய்தோம் என்று  கூறுவோர் வயிற்றுப் பசியை போக்கவில்லை : சோ. ஸ்ரீதரன்

வரிசை யுகத்தை இல்லாமல் செய்தோம் என்று கூறுபவர்களால் நாட்டு மக்களின் வயிற்றுப் பசியை இன்னும் போக்க முடியவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின்  அமைப்பாளர்களால் டிக்கோயா புளியாவத்தை நகர கோயில் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில் கூறியதாவது:

கேஸ் மற்றும் எரிபொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த நிலைமையை நாம் மாற்றி விட்டோம் என்று இன்றைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள்.ஆனால் 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த பொருட்களின் விலையானது இன்று  பன்மடங்காக அதிகரித்துள்ளன.

1300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட எரிவாயு இன்று 3800 ரூபாவாக உள்ளது. அதேபோல பெட்ரோல் ,டீசல், மண்ணெண்ணெய் போன்றன மும்மடங்காக அதிகரிகப்பட்டுள்ளன. பஸ் கட்டணங்களும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியும் 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் தமக்கான அத்தியாவசியப் பொருட்கள் சேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட முடியாத நிலைமையிலேயே நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில்
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி விட்டோம் என்று இன்றைய அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களால் கூறுவதை நாட்டு மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.

எனவே இந்த நாட்டுக்கு புதிய ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்யப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை
வெற்றிப் பெறச் செய்வது எமது கடமையாகும். இதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டி தலைவர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று சோ. ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.