இன்றைய வானிலை!
இன்றையதினம் (01) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகின்றது.
வட மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
Editor