எரிபொருள் விலையில் இன்று மாற்றம் ஏற்படுமா?
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இன்று அறிவிப்புகள் வெளியாகும்.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின் படி 92 ரக ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டதுடன் மேலும் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மண்ணெண்ணெய் விலையில் கடந்த மாதம் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Editor