பெருந்தோட்ட மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளனர் - கிட்ணன் செல்வராஜ்!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்க பெருந்தோட்டத் துறையில் பணியாற்றுபவர்கள் தயாராக இருப்பதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
200 வருட கால வரலாற்றில் பெருந்தோட்ட சமூகத்தை பல தசாப்தங்களாக அடிமைப்படுத்திவந்த தரப்பினருக்கு இந்த தேர்தல் முடிவு கட்டப்படும்.
பெருந்தோட்ட மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தி வரும் தொண்டமான் தலைமுறையினரையும் அது ஏனைய தரப்பினரையும் மக்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Editor