மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு 13ம் திகதி விசேட விடுமுறை
(செய்தி - தலவாக்கலை பி.கேதீஸ்)
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ஆம் திகதி தீபாவளி பண்டிகை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விடுமுறை நாளுக்கு பதிலாக எதிர்வரும் (18) சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த வேண்டும் எனவும் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாவட்டங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Editor