பாதியில் எழுந்துச் சென்ற ஜீவன் தொண்டமான் - அதிருப்தியடைந்த அரசியல் தலைவர்கள்!

நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் தமக்கு பிரதான உரை வழங்கப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோபமடைந்துள்ளார்.

இதனால், விழா முடிவதற்குள் அமைச்சரும், அக்கட்சியின் எம்.பி.யுமான மருதபாண்டி ராமேஸ்வரனும் கலைந்து சென்றனர்.

இதனால் குறித்த விழாவில் கலந்துகொள்ள வந்த அரசியல் தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், இந்த புலமைப்பரிசில் திட்டம் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.