அநுர தலைமையில் ஆரம்பமாகும் மற்றுமொருத் திட்டம்!
மத்திய அதிவேக பாதையில் இடைநிறுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த கடவத்தை - மீரிகம
இடையிலான பாதை அமைக்கும் பணிகள் நாளை 17ஆம் ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது.
மத்திய அதிவேக பாதை இலங்கை போக்குவரத்துக் கட்டமைப்பில் இணைந்தால் அது பாரிய பொருளாதார
நன்மைகளை நாட்டுக்கு ஈட்டித்தரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இதன் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டிருந்த போதிலும்
பல்வேறு நெருக்கடிகள் காரணமாக தொடர்ச்சியாக இத்திட்டம் தடைப்பட்டுவந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் பாதையின் பணிகளை
நிறைவு செய்ய தற்போது அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Editor