மக்கள் எதிர்பார்த்த திட்டம் ஆரம்பம்
பல தசாப்தங்களாக மக்கள் எதிர்பார்த்திருந்த ஓர் அபிவிருத்தி திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று ஆரம்பித்து வைத்தார்.
உண்மையில் இது பல தசாப்தங்களாக மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திட்டம் என்பதுடன், கடந்தகால அரசாங்க செய்ய மறுத்த ஓர் அபிவிருத்தித் திட்டமும் கூட.
இலங்கை பொருளாதாரத்தின் மத்திய இடம்தான் புறக்கோட்டைப் பகுதி என்பது. இங்கிருந்துதான் இலங்கையின் பல பொருளாதார நகர்வுகள் இடம்பெறுகின்றன.
பொருளாதாரத்தின் பிரதான கூறுதான் பொது போக்குவரத்து என்பது.
ஒரு நாடு வளர்ச்சியடைய வினைத்திறனான பொது போக்குவரத்து என்பது பிரதானமானதும் அவசியமானதும். ஐரோப்பிய நாடுகள் அதிவேக வளர்ச்சிகளை எட்ட பொதுபோக்குவரத்துதான் பிரதான காரணம்.
பல நாடுகளில் முறையான பொது போக்குவரத்துகள் இல்லை என்பதால் தான் பொருளாதார வளர்ச்சி என்பது மந்தமாக உள்ளது. இதனை உணர்ந்துதான் இந்தியா அதன் பொது போக்குவரத்தை நவீன முறையில் கட்டியெழுப்பி வருகிறது.
இந்தியாவில் இப்போது ஜப்பான் போன்று புல்லட் ரயில் சேவைகளும் ஆரம்பமாகி வருகின்றன. ஆனால், மிகவும் சிறிய நாடாக உள்ள இலங்கையால் முறையான பொதுக் போக்குவரத்தை கட்டியெழுப்ப முடியாது போயிருந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறை உணர்ந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொது போக்குவரத்தின் அபிவிருத்திதான் முதன்மையானது என ஜனாதிபதி கூறியிருந்தார்.
அவர் கூறியது போன்றே பொது போக்குவரத்தை கட்டியெழுப்புவதற்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்துள்ளார். நிச்சயமாக இதனை நாட்டு மக்கள் வரவேற்பார்கள்.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் அசௌகரியங்களை சந்திக்காத சாதாரண நபர் ஒருவர்கூட இருக்கமாட்டார். இங்கு வரும் மக்கள் கடந்தகால அரசாங்கங்கள்மீது சாபங்களை விட்டு செல்வதுதான் வழக்கம்.
மக்களின் இந்த உள்ளக் குமுறலை உணர்ந்துதான் தற்போதைய அரசாங்கம் இந்த பஸ் நிலையத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்யும் திட்டத்தை வகுத்ததுடன், இதன் பணிகளை இன்று ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார்.
50 இலட்சம் வரையான பயணிகள் இலங்கையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இலங்கையில் முதல்கட்டமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய துறையாக பொதுப் போக்குவரத்து துறையே இருகிறது.
அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு இந்த வழிகள் தெரியும்.
புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிடத்தை நவீனமயப்படுத்தும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. 60 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என அங்கு நீண்டகாலமாக பணியாற்றிவரும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பிரதான போக்குவரத்து மையாக உள்ள இதுகுறித்து கடந்தகால அரசாங்கங்கள் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் அதிகாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் benz car politicians எனப்படும் செல்வதந்த அரசியல்வாதிகள் இவர்களுக்கு சாதாரண மக்களின் மன வேதனை தெரிந்தாலும் அதனை அனுபவிக்காதவர்கள்.
இந்த பஸ் தரிப்பிடத்தில் பயணிகள் அமர்ந்திருப்பதற்கு கூட ஒழுங்கான இருக்கைகள் இல்லை. மலசலக்கூடத்துக்குச் செல்ல முடியாது. குறிப்பாக பெண்கள் செல்லவே முடியாது. நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய பெண்களின் நிலைமைகள் மற்றும் உணர்வுகளை உணராத அரசாங்கங்கள்தான் கடந்தகால அரசாங்கங்கள்.
பஸ்கள் சிற்றூண்டிக்கா நிறுத்தும் இடங்களிலும் மலசலக் கூட்டங்களின் நிலைமை மத்திய பஸ் தரப்பிடத்தில் இருப்பதை போன்றுதான் மோசமாக இருக்கும்.
கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்தில் ஒழுங்கான சிற்றூண்டிச்சாலைகள் இல்லை. பஸ் தரிப்பிடத்தை சுற்றியுள்ள கான்களை பார்த்தால் வாந்தி வந்துவிடும்.
நீண்டகாலமாக பயணிகளின் உள்ளக் குமுறலாக இருந்த விடயத்தை இந்த அரசாங்கம் அறிந்து செயல்படுகிறது. நிச்சயமாகத் இத்திட்டம் நாட்டுக்கு அத்தியாவசியானது.
இங்கிருந்து 1500 இற்கும் அதிகமான அரச பேருந்துகள் நாட்டின் அனைத்து திசைகளுக்கும் இயக்கப்படுகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
நாட்டின் பிரதான பொருளாதார மையங்களில் ஒன்றாக உள்ள இந்த பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன் பயணிகள் சிரமமின்றி காத்திருந்து தமது பயணங்களை மேற்கொள்ளும் வகையில் அபிவிருத்தி செய்யப்படுவது கட்டாயம்.
இதன் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா வரை அபிவிருத்திக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன், எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் புனரமைப்பின் பின்னர் இது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.
இத்திட்டத்துடன், பயணிகள் பயணிக்கக் கூடிய சிறந்த பேருந்துகளை அரச போக்குவரத்தில் இயக்க வேண்டும் என்பது சாதாரண பயணிகளின் கருத்து. பொது போக்குவரத்தின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தையும் கௌரவத்தையும் பாரிய அளவில் உயர்த்தும்.
நிச்சயமாக இந்த திட்டத்தின் ஊடாக ஜனாதிபதியும் போக்குவரத்து அமைச்சரும் மக்களின் உணர்வை பிரதிபலிக்கின்றனர்.
விரைவில் மேல்மாகாணத்தில் ஐரோப்பிய நாடுகளை போன்று சிட்டி பஸ் சேவையை தொடங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம். நாடு முழுவதும் இந்த மெல்ல மெல்ல விரிவுபடுத்தப்பட வேண்டும்.
எனவே, இலங்கையின் பொது போக்குவரத்தை நவீனமயப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை பொது மக்களாக அனைவரும் வரவேற்க வேண்டும்.
Editor