‘திசைக்காட்டியின் ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதலுக்குத் தீர்வு’  - அநுரகுமார திஸாநாயக்க

கனடாவுக்கு விஜயம் கேற்கொண்டுள்ள அநுரகுமார எம்.பி, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகிறார்

‘திசைக்காட்டியின் ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதலுக்குத் தீர்வு’  - அநுரகுமார திஸாநாயக்க

“ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்த அதிகாரி, தற்போது எமது கட்சியுடன் இணைந்திருக்கிறார். அதனால், இந்தப் பிரச்சினைக்கு,

எமது ஆட்சியில் கட்டாயம் தீர்வு வழங்கப்படும்” என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, கனடாவில் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் கேற்கொண்டுள்ள அநுரகுமார எம்.பி, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற சந்திப்பில், “ஈஸ்டர் தாக்குதல் குறித்து 2025 ஆம் ஆண்டு உண்மையை கண்டறிவீர்கள் என்று கனடாவில் உள்ள கத்தோலிக்க சமுகம்  எதிர்பார்க்கிறது. இதற்கான தீர்வு என்ன?” என்று, அங்கிருந்த ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் குறித்து தெரியும் என்று தற்போது கூறியுள்ளார். தாக்குதல் நடைபெற்ற போது அவர்தான் ஜனாதிபதி. அவருக்குத்தான் அது குறித்து பொறுப்பு உள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த அதிகாரி, நம் கட்சியோடு இணைந்திருக்கிறார். எனவே, கண்டிப்பாக தீர்வு வரும்” என்று, அநுரகுமார எம்.பி தெரிவித்துள்ளார்.