கண்டித் தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கமா?
கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் பாரத் அருள்சாமி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், இங்குள்ள தோட்டப்புற மக்கள் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இம்முறை தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை ஆதரிக்க போவதாக தெரிவிக்கின்றனர்.
தமது வாக்குகளை பெற்றுக்கொள்ள மாத்திரமே இவர்கள் வீடுகளுக்கு வருவதாகவும் பின்னர் 5 வருடங்கள் இவர்களை காண முடிவதில்லை என்றும் கூறுகின்றனர்.
இம்முறை நிச்சயமாக கண்டியில் பாரிய மாற்றம் இடம்பெறும் என்றும் அது அவர்களுக்கு கிடைக்கும் சிறந்த பதில் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
Editor