1700 ரூபா சம்பள உயர்வுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
இந்த மனு மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
சம்பள அதிகரிப்புக்கு எதிராக அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனி உட்பட 21 பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 சம்பள அதிகரிப்பை தற்காலிகமாக கிடைக்காது என்பதுடன், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் பிரகாரமே மீண்டும் சம்பள அதிகரிப்பு கிடைக்குமா இல்லை என்பதை தெளிவாகும்.
Editor