கிளப் வசந்த கொலை தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது - மனைவி வைத்திருந்த துப்பாக்கி சட்டவிரோதமானது  

டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளரை தவிர துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு வாகனங்களை வழங்கியவர்களும் கொலைக்கு உதவியவர்களும் மற்ற சந்தேக நபர்களாவர்.

கிளப் வசந்த கொலை தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது - மனைவி வைத்திருந்த துப்பாக்கி சட்டவிரோதமானது  

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளரை தவிர துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு வாகனங்களை வழங்கியவர்களும் கொலைக்கு உதவியவர்களும் மற்ற சந்தேக நபர்களாவர்.

மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளர் அவ்வப்போது 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதுருகிரியில் உள்ள படெட்டு குத்தும் நிலையத்தின் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா என்ற வர்த்தகர் உயிரிழந்தார்.
 
அப்போது அங்கிருந்த பிரபல பாடகி கே. சுஜீவாவின் உதவியாளர் நயனா வசுலவும் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி, சுஜீவா, மற்றுமொரு பெண்ணும் ஆணும்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி வைத்திருந்த துப்பாக்கி சட்டவிரோத துப்பாக்கி என பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில், குற்றவாளிகள் மறைந்திருக்க முடியாது எனவும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்செயலும் வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகும், இரண்டரை மாதங்களுக்குப் பிறகு இவ்வாறு ஒரு சம்பவம் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.