கெஹலியவின் பதவியும் பறிபோகிறது

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

கெஹலியவின் பதவியும் பறிபோகிறது

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றாடல் அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த 2ஆம் திகதி கெஹலியவைக் கைது செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இவரை பதவி விலக்க வேண்டுமென ஆளுங்கட்சிக்குள்ளேயே கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக கெஹலியவின் பதவியை பறிப்பது தொடர்பில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.