சரியும் ரணிலின் செல்வாக்கு - ஊவா மாகாண ஆளுநர் சஜித்துடன் இணைவு!
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முஸம்மில் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் ரணிலின் செல்வாக்கும் கடுமையாக சரிய தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Editor