'யுக்திய’விற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது இலங்கை பொலிஸாரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் யுக்திய செயற்றிட்டம் குறித்து கரிசனம் வெளியிட்டுள்ளது

'யுக்திய’விற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது இலங்கை பொலிஸாரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் யுக்திய செயற்றிட்டம் குறித்து கரிசனம் வெளியிட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் கண்மூடித்தனமான கைதுகள் தடுத்துவைத்தல் போன்ற உரிமை மீறல்கள் நடைபெறுவதாக  தகவல்கள் கிடைத்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யுக்திய நடவடிக்கை குறித்து கடும் கரிசனையை வெளியிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, யுக்திய (நியாயம்) என்ற சிங்கள சொல்லிற்கு பொருத்தமற்றதாக இந்த நடவடிக்கை மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது இளைஞர்கள் உட்பட்டவர்களை ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துதல் குறித்த  மு2றப்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.