சஜித் பிரேமதாசவுக்கு அதிகரிக்கும் ஆதரவு
30 முதல் 59 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் அதிகமானவர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி கருத்துக் கணிப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி மேற்கொண்ட கருத்துகணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.
ஜூன், ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் கலந்துகொண்ட 30 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களில்
38 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவிற்கும்,
37 வீதமானவர்கள் அனுரகுமாரதிசநாயக்கவிற்கும்,
22 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பதும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித்பிரேமதாசவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவை வெளியிட்டதும் இதே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கபட்டது.
Editor