இந்திய வீடமைப்பு கட்சி ரீதியாக செயற்படுகின்றதா?

இந்த வீடமைப்பு திட்டம் கட்சி ரீதியாக செயற்படுகின்றமை தொடர்பாக நான் ஏற்கனவே இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். எனவே அவர்களுக்கு முழுமையான பொறுப்பு இருக்கின்றது.

இந்திய வீடமைப்பு கட்சி ரீதியாக செயற்படுகின்றதா?

இந்திய வீடமைப்பு திட்டம் கட்சி ரீதியாக அல்லாமல் அனைவருக்கும் கிடைப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் தான் இது தொடர்பாக இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கடிதம் மூலம் கொண்டு சென்றிருப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

இராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பொழுதே இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்று அண்மையில் இராகலை நகரில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் உப தலைவருமான ஆர்.ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய வீடமைப்பு திட்டம் என்பது ஒரு தனிப்பட்ட கட்சியின் நிகழ்ச்சி நிரல் அல்ல அது அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு செயற்திட்டமாகும். அதனை வைத்துக் கொண்டு யாரும் அரசியல் செய்ய முடியாது. அரசியில் ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ பயனாளிகளை தெரிவு செய்ய முடியாது.

இந்த வீடமைப்பு திட்டம் கட்சி ரீதியாக செயற்படுகின்றமை தொடர்பாக நான் ஏற்கனவே இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். எனவே அவர்களுக்கு முழுமையான பொறுப்பு இருக்கின்றது.

இந்த வீடமைப்பு திட்டத்திற்கான செய்தியை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்தவர் இலங்கைக்கு விஜயம் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி அரசாங்கத்தின் காலகட்டத்தில் அதாவது நல்லாட்சியில் அன்று நாம் இந்த திட்டத்தை கொண்டு வந்த போது இது அனைவருக்கும் பொதுவான எமது மக்களுக்கான திட்டமாகவே முன்மொழிந்தோம் என தெரிவித்தார்.