மண்சரிவு எச்சரிக்கை

மண்சரிவு எச்சரிக்கை

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலத்துக்கு அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. 

அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நில்தந்தஹின்ன, வலப்பனை ஆகிய பகுதிகளுக்கு 2ஆம் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பதுளை மாவட்டத்தின், மீகஹகிவுல, கந்தகெட்டிய, நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கு 1ஆம்நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது  பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.