விஜயதாச ராஜபக்ஸ வெற்றிபெற ஜீவன் வாழ்த்து
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததை வரவேற்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததை வரவேற்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகவே இந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தருணத்தில் அமைச்சுக்கள் சார்ந்த வரப்பிரசாதங்களை பயன்படுதத் முடியாது.
எனவேதான், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆளும் கட்சி சார்ந்தவர்களாகவோ எதிர்க்கட்சியினை சார்ந்தவர்களாகவோ அல்லது சுயாதீன வேட்பாளர்களாகவோ இருப்பினும் தனது அமைச்சு பொறுப்பிலிருந்து விலகி தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்கின்றேன். அதேவேளை, வெற்றிப்பெறவும் வாழ்த்துகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Editor