ரணிலின் கருத்துக்கு மனோ அளித்துள்ள பதில்
ஏற்கனவே உறுதி செய்துவிட்டுதான் ஐக்கிய மக்கள் சக்தியில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இணைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக இன்றைய நாளேடுகளில் செய்திகள் வெளியாகியிருந்ததை காண முடிந்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

”அவ்வாறில்லை. அவரது கருத்து தவறானது. அவருக்கு உரிய பதிலை அளிக்க விரும்புகிறேன். நாங்கள் சில காரணிகளின் அடிப்படையில்தான் கூட்டணியில் இணைகிறோம்.
நாம் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய மக்களின் நலன் முக்கியமானது எமக்கு. மக்களுக்கு நன்மை சேர்க்கும் அணி இத என்ற அடிப்படையில்தான் சேர்கிறோம்.” எனவும் இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கூறினார்.
Editor