நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ரணிலுக்கு ஆதரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ரணிலுக்கு ஆதரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் வேட்பாளர் அரியநேத்திரத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், சுமந்திரன் தலைமையிலான மற்றைய தரப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவினை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இவரது இந்த அறிவிப்பின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ளமை தமிழ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.