அமைச்சர் பவித்ரா ரணிலின் கையை உயர்த்தினார் - மஹிந்த அதிருப்தி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக பவித்ரா வன்னியாராச்சி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நம்பகத்துக்குரிய பாத்திரமாக பவித்ரா வன்னியாராச்சி கடந்த காலத்தில் திகழ்ந்தார். மஹிந்த தரப்புக்கான ஆதரவை அவர் இந்த அறிவிப்பின் ஊடாக விலக்கிக்கொண்டுள்ளதால் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே, நம்பகத்துக்குரிய பாத்திரமாக கருதப்பட்ட ரோஹித் அபேகுணவர்தனவும் ரணில் விகர்மசிங்கவுக்கு ஆதரவளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Editor