2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்

2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்

இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேடல் முடிவுகளை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் முதல் 10 பட்டியலில், உலகின் மிகப்பெரிய விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இல்லை.

தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவரும் முதல் 10 இடங்களுக்குள் இருந்து விடுபட்டுள்ளனர்.

கூகுள் தேடலில் அமெரிக்க கால்பந்து வீரர் டமர் ஹாம்லின் முதலிடம் பிடித்துள்ளதோடு பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

2023ல் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் முதல் 10 பட்டியலில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அது விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா அல்லது எம்.எஸ். தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரோ இல்லை.


இந்திய கிரிக்கெட் வீரர்

முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே இந்தியர் சுப்மன் கில் ஆவார்.

2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் | Google Top 10 Searched Athletes 2023 Rachin Raveen

இவர் இந்திய தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர் கூகுள் தேடலில் முதல் 10 இடங்களில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார்.


ஆனால் அவரை 9 வது இடத்திற்கு தள்ளி இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திரா,கூகுள் தேடலில் 8 வது இடத்தை பிடித்துள்ளார்.

ரச்சின் ரவீந்திரா

நியூசிலாந்திற்காக சமீபத்தில் நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை ரச்சின் ரவீந்திரா வெளிப்படுத்தினார்.

2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் | Google Top 10 Searched Athletes 2023 Rachin Raveen

எதிர்வரும் 19 ம் திகதி நடைபெறவுள்ள ஐபில் ஏலத்தில் இவர் எந்த அணியில் ஏலத்தில் எடுக்கப்படுவார் என இரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

கூகுள் தேடலில் முதல் 10 இடம் பிடித்த வீரர்கள்
1 Damar Hamlin- டமர் ஹாம்லின்

2 Kylian Mbappé-  கைலியன் எம்பாப்பே

3 Travis Kelce- டிராவிஸ் கெல்ஸ்

4 Ja Morant-  ஜா மோரன்ட்

5 Harry Kane- ஹாரி கேன்

6 Novak Djokovic- நோவக் ஜோகோவிச்

7 Carlos Alcaraz- கார்லோஸ் அல்கராஸ்

8 Rachin Ravindra-  ரச்சின் ரவீந்திரா

9 Shubman Gill- சுப்மன் கில்

10 Kyrie Irving- கைரி இர்விங்