ஆட்டத்தை ஆரம்பித்த நாமல் - ஆட்டங்காணுமா அரசாங்கம்?
'கிராமம் கிராமமா' என்ற தொனிப்பொருளின் கீழ் நாடு முழுவதும் மக்களை சந்திக்கும் பிரசாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, ஆரம்பித்துள்ளார்.
இந்தப் பிரச்சாரத்தின் முதல்கட்டமாக அம்பாறை மாவட்டம், அம்பாறை தொகுதிக்கான பொதுக் கூட்டம் மஹோயா பிரதேச சபையின் எம்.பி. மானெல் இரங்கனியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த பிரச்சாரக் கூட்டத்தின் பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்டத் தலைவர் டபிள்யூ.டி.வீரசிங்க, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யு.கே.சுமித், ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அரசாங்கம் ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியையும் பழிவாங்கும் ஆட்சியையும் மேற்கொள்வதாக நாமல் ராஜபக்ச, குற்றம் சுமத்தினார்.
அரசாங்கத்துக்கு எதிரான கடுமையான பிரச்சாரங்களை தொடர்ந்து இவர் மேற்கொள்ள உள்ளதாக பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
Editor