நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் விரைவில் விநியோகிக்கப்படும் - பிமல் ரத்நாயக்க
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகளை விநியோகிக்க அரசாங்கம் நடடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்
எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த இலக்க தகடுகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது சந்தையில் வாகன இலக்கத்தகடுகள் இல்லாத பெருமளவான வாகனங்கள் உள்ளன. முந்தைய வர்த்தக நிறுவனங்களுடன் அரசியல் நடவடிக்கை, ஊழல் மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மோட்டார் வாகனத் திணைக்களம் சுமார் 10 ஆண்டுகளாக முன்னேறவில்லை.
புதிய சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கப்படும் என்றும், வாகன இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களுக்கு அடுத்த வாரம் தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
Editor