திருடர்களை பிடிக்கும் பொலிஸ் கட்டிடத்தில் கொள்ளை
திருடர்களை பொலிஸ்தான் பிடிக்க வேண்டும். ஆனால், இலங்கையில் திருடர்கள் தங்கள் கைவரிசையை பொலிஸாருக்கே காட்டியுள்ளனர்.
கொழும்பில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஆறாவது மாடியில் உள்ள கேட்போர் கூடத்தில் மின் இணைப்பு வயர்கள் துண்டிக்கப்பட்டு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் கேட்போர் கூடத்திற்குள் நுழைந்து கேட்போர் கூடத்தில் உள்ள மின்னணு சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கும் மின்சார கம்பிகளில் இருந்து செப்பு கம்பி வயர்களை திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் கடந்த ஆகஸ்ட் 01 முதல் செப்டம்பர் 24 வரை காலப் பகுதியில் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை.
Editor