வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு; ரணிலிடமிருந்து வெளியான மகிழ்ச்சியான செய்தி

வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு; ரணிலிடமிருந்து வெளியான மகிழ்ச்சியான செய்தி

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

தனியார் துறையினரும் இந்தத் தீர்மானத்தை பின்பற்ற முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் ஜனாதிபதியால் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.