ஜனாதிபதியுடன் 30ஆம் திகதி உடன்படிக்கை கைச்சாத்து - தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் இ.தொ.கா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட உள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட உள்ளது.
இதுதொடர்பான கலந்துரையாடல்கள் இன்றுமுதல் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இடம்பெற உள்ளதாக தெரியவருகிறது.
பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை, வீடுகளை கட்டிக்கொடுத்தல், மலையகத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை உருவாக்கல், தாதியர் கல்லூரி ஒன்றை அமைத்தல், இரத்தினபுரி, கேகாலை, பதுளை மாவட்டங்களில் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்கல், தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் ஆரம்ப சுகாதார மையங்களாக மாற்றுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயார்ப்படுத்தப்பட உள்ளது.
Editor