''மலையகத்தில் முதலீட முன் வாருங்கள்” - சென்னையில் வைத்து அழைப்பு விடுத இராதா

அப்படி முதலீடு செய்வதற்கு முன்வருகின்றவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்

''மலையகத்தில் முதலீட முன் வாருங்கள்” - சென்னையில் வைத்து அழைப்பு விடுத இராதா

“சர்வதேச மட்டத்திலும் இந்தியாவிலும் இருக்கின்ற தமிழ் வர்த்தகர்கள் இலங்கையின் மலையக பகுதிகளில் தங்களுடைய முதலீடுகளை செய்ய முன் வர வேண்டும் இதன் மூலமாக இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உங்களுடைய பங்களிப்பை செய்ய முடியும் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்”  என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில நேற்று ஞாயிற்றுக்கிழமை (07)  நடைபெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டின் நிறைவு நாளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மேலும் அவர், இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்ற பொழுது அதனை மீள கட்டியெழுப்புவதற்கு அதிக பங்களிப்பை செய்த நாடு இந்தியா என்பதை யாரும் மறுக்க முடியாது.எனவே எங்களுடைய இந்திய வம்சாவளி தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் பரந்து வாழ்கின்றார்கள்.அவர்களில் அநேகமானவர்கள் இன்று பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்கள் எனவே அவர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன் வர வேண்டும்


அப்படி முதலீடு செய்வதற்கு முன்வருகின்றவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.குறிப்பாக இலங்கையின் மலையக பகுதிகளில் அதாவது அதிகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களில் தங்களுடைய முதலீடுகளை செய்ய முன்வருவார்களானால் எங்களுடைய மக்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அது ஒரு உந்து சந்தியாக அமையும் ​என தெரிவித்தார்.