ஜனாதிபதியின் “பட்ஜெட்“ நாட்டின் எதிர்காலத்தக்கானது
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் மக்களுக்கு சலுகைகளை வழங்கி தேர்தலில் வெற்றிபெறுவதையே எந்தவொரு அரசியல்வாதியாக இருந்தாலும் சிந்திப்பார்.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் மக்களுக்கு சலுகைகளை வழங்கி தேர்தலில் வெற்றிபெறுவதையே எந்தவொரு அரசியல்வாதியாக இருந்தாலும் சிந்திப்பார். ஆனால், நாட்டையும் மக்களின் எதிர்காலத்தையும் எண்ணியே ஜனாதிபதி வற் வரியை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினரும், ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியதாவது,
”கடந்த நவம்பர் மாதம் வரவு - செலவுத் திட்டத்தை கொண்டுவர முன்னர், ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து வரவு - செலவுத் திட்டத்தை கொண்டுவருவதாக கூறினர். தற்போது வரவு - செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.
ஜனாதிபதியின் பட்ஜெட் தேர்தலை இலக்குவைத்து கொண்டுவரப்பட்டதல்ல. ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் மக்களுக்கு சலுகைகளை வழங்கி வாக்குகளை பெறவே அனைத்து அரசியல்வாதிகளும் முற்படுவார்கள். ஆனால், நாட்டையும் நாட்டின் எதிர்கால சந்ததியையும் கருத்திற் கொண்டே ஜனாதிபதி தமது பணிகளை முன்னெடுத்து வருகிறது.
ஒருவருடத்திற்கு இருந்த நிலைக்கும் இன்று நாடு இருக்கின்ற நிலையையும் அனைவரும் உற்றுநோக்க வேண்டும். முதலில் வரிசை யுகத்துக்கு ஜனாதிபதி முடிவுகட்டினார். பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஆரம்பித்தார். இன்று நாடு ஸ்திரமான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்கு நாடு பொருளாதார ரீதியாக பலமாகும். அதற்கான அடித்தளத்தை ஜனாதிபதி இட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவு தற்போது ஓரளவு அதிகமாகும். ஆனால், நாட்டின் விரைவாக செலவுகள் குறைவடையும். அதனை ஜனாதிபதி கட்டாயம் செய்வார். ஆகவே, எதிர்க்கட்சிகளின் போலியான கருத்துகளை மக்கள் நம்ப கூடாது. கடந்த வருடத்தையும் இந்த வருடத்தையும் ஒப்பிட வேண்டும். அவ்வாறு ஒப்பிட்டால் அடுத்தவருடம் நாடு எவ்வாறான நிலையில் இருக்குமென ஊகித்துக்கொள்ள முடியும். நிச்சியமாக மக்களின் வாழ்க்கை சுமைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைவடையும்.” என்றார்.
Editor