ஜனாதிபதித் தேர்தல் திகதி விரைவில்
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இத்தேர்தலுக்கு பயன்படுத்த முடியும் எனவும் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி தேர்தல் திகதியை ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு எந்த தேர்தலுக்கும் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை இத்தேர்தலுக்கு பயன்படுத்த முடியும் எனவும் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
Editor