ஹட்டனில் பல்கலைக்கழக வளாகம் - மலையகத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் அதிகரிக்கப்படும் ; சஜித்
மலையக பல்கலைக்கழத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக ஹட்டனில் பல்கலைக்கழக வளாகமொன்று உருவாக்கப்படும் என்றும் மலையக மக்களை மையப்படுத்தியுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முக்கிய தீர்மானங்கள் தமது ஆட்சியில் எடுக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் பரவலான வாழ்விட முறையைக் கருத்தில் கொண்டு, அபிவிருத்தித் திட்டங்களில் மலையக தமிழ் சமூகத்தின் கலாச்சார, சமூக, பொருளாதார மற்றும் அரசியல், வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் சட்ட மூலங்கள் மற்றும் சட்டங்களைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையில் அரசாங்க நிறுவனமாக நிலத் தொடர்பற்ற சமூக சபையை உருவாக்கவும் அவர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழிந்துள்ளார்.
Editor