வெற்றி உறுதி -  நாமல் சூளுரை

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ இன்று சூளுரைத்துள்ளார்.

வெற்றி உறுதி -  நாமல் சூளுரை

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ இன்று சூளுரைத்துள்ளார்.

"எனது வெற்றி கட்சியின் வெற்றியாகும். கட்சியின் வெற்றி நாட்டின் வெற்றியாகும்." - என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கட்சியில் இருந்து வெளியேறியுள்ள உறுப்பினர்களை மீளக் கட்சிக்கு வருமாறும் நாமல் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்ட நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறினார்.