சுவிஸ் வங்கிகளின் மர்மம் நீங்குமா? ரகசியத்தை முடிவுக்கு கொண்டுவர பிரேரணை
பிரேரணையின்படி, வங்கி இரகசியமானது வரி ஏய்ப்பை ஊக்குவிக்கிறதுஇ இதனால் 13வது ஓய்வூதியம், இராணுவம் மற்றும் பிற பொதுச் செலவுகளுக்கு நிதியளிக்க மத்திய அரசு மற்றும் மண்டலங்களுக்கு போதுமான பணம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வங்கி ரகசியத்தை முடிவுக்கு கொண்டுவர பிரேரணை சுவிட்சர்லாந்திற்கு வெளியில் உள்ளவர்கள் சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கும் சொத்துக்களுக்கு அந்நாட்டின் வங்கிகள் உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும் சுவிஸ் குடியிருப்பாளர்களின் கணக்குகள் இன்னும் இரகசியமாக பேணப்பட்டு வருகிறது.
அதாவது, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் கணக்குகள் பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள முடியாது.
எனினும், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு இடதுசாரி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்தனர் .
பிரேரணையின்படி, வங்கி இரகசியமானது வரி ஏய்ப்பை ஊக்குவிக்கிறதுஇ இதனால் 13வது ஓய்வூதியம், இராணுவம் மற்றும் பிற பொதுச் செலவுகளுக்கு நிதியளிக்க மத்திய அரசு மற்றும் மண்டலங்களுக்கு போதுமான பணம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், வங்கி ரகசியத்தை நீக்குவது, வரி ஏய்ப்பைத் தடுக்கும் எனவும் மற்றும் அரசின் கருவூலங்களுக்கு அதிக பணத்தை வாரி வழங்கும் எனவும் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதுவரை பாராளுமன்றம வங்கி ரகசியத்தை ஒழிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Editor