பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேருக்கும் பிணை

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேருக்கும் பிணை

அனுராதபுரம் ருவன்வெலிசாய புனிதப் பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரையும் பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 12ஆம் திகதி அனுராதபுரம் ருவன்வெலிசாய புனிதப் பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி குறித்த பகுதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையிலும் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேருடன் மேலும் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 11 பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ருவன்வெலிசாய புனிதப் பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன