அநுர எதனையும் செய்யவில்லை - இராதா குற்றச்சாட்டு
”ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன மக்களுக்கு சேவை செய்துவிட்டு ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். ரணசிங்ஹ பிரேமதாச பிரதமராக இருந்து சேவை செய்துவிட்டு ஜனாதிபதியானார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேல் மாகாண முதலமைச்சராக வேவை செய்துவிட்டு ஜனாதிபதியானார். மகிந்த ராஜபக்சவும் அமைச்சராக பல சேவைகள் செய்துவிட்டு ஜனாதிபதியானார். மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சராக இருந்து பல சேவைகள் செய்துவிட்டு ஜனாதிபதியானார்.
கோட்டபாய ராஜபக்சவும் பாதுகாப்பு செயலாளராக இருந்து பல அபிவிருத்தி வேலைகள் செய்துவிட்டு ஜனாதிபதியானவர். ரணில் விக்கிரமசிங்ஹவும் பல சேவைகள் செய்துவிட்டு ஜனாதிபதியானார். ஆனால், ஒன்றுமே செய்யாமல் ஒரு குறிப்பிட்ட சில காலம் அமைச்சராக இருந்து ஒன்றும் செய்ய முடியாமல் இடையில் பதவியை விட்டு வெளியில் வந்து வாய் பேச்சாலும் பொய்யான வாக்குறுதிகளாலும் 51 வீத வாக்கு இல்லாமல் ஜனாதிபதியானவரே அநுரகுமார திசாநாயக்க. எனவே, இனியாவது மக்களுக்கு வேலை செய்ய வேண்டும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இராகலை பகுதயில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அங்கு பேசிய அவர்,
”எதிர்கட்யில் இருந்து பேசிய எந்த ஒரு காரியத்தையும் அநுரவால் செய்ய முடியாமல் இருக்கின்றது. பொருட்களின் விலை அதிகரிப்பு, அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இன்மை, ஊழல் வாதிகள் கைது செய்யப்படவில்லை இப்படி தான் கூறிய எதனையும் அவர் செய்யவில்லை.
கடந்த ஒரு மாத காலத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருந்த முடப்பட்ட பாதையை திறந்தததை தவிர வேறு எதனையும் செய்யவில்லை. இதன் காரமணாகவே எல்பிட்டிய தேர்தலிலும் அரசாங்கம் பின்னடைவை சந்தித்தது. அதே நிலைமை நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்படுவதற்கான வாய்ப்பே அதிகம் இருக்கின்றது. எனவே, எங்களுடைய வெற்றியானது தெளிவாக தெரிகின்றது. எங்களிடம் திறமையான அனுபவம் வாய்ந்த பலர் இருக்கின்றார்கள். அதற்காகவே நாம் நாடாளுமன்ற பெரும்பான்டையை பெற்றுத் தருமாறு கேட்கின்றோம். மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய ஒரு கால கட்டம் இதுவாகும்.” என்றார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
Editor