நாடு திரும்பினார் அநுர 

நாடு திரும்பினார் அநுர 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தை நிறைவு செய்து நேற்று இரவு நாடு திரும்பினார்.

செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட AI Impact Summit 2026 மாநாடு, அரச தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் தொழில்நுட்ப பிரதானிகளின் பங்கேற்புடன் புதுடெல்லியில் நடைபெற்றதோடு கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்கேற்று விசேட உரையை நிகழ்த்தியிருந்தார். 

மனித குலத்தின் கலாசார விழுமியங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இந்த மாநாட்டில்  கருத்து வெளியிட்டிருந்தார். 

அத்தோடு மாநாட்டின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் , பிரேசில் ஜனாதிபதி லூலா த சில்வா, அபூதாபி முடிக்குரிய இளவரசர்கலீத் பின் முகமது பின் சயீத் அல் நகியான்  மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகிய அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தார். 
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது.

இதேவேளை, இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான விசேட பிரதிநிதியும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோர் உடனான சந்திப்பிலும் ஜனாதிபதி ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.