23,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி

23,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி

23,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். 

இதன் மூலம் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை  ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.