நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் பஸ் விபத்து – 20 பேர் காயம்!
நானுஓயா, ரதல்ல குறுக்கு பாதையில் இன்றிரவு (22) பஸ்ஸொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 20 பேர்வரை காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நானுஓயா, ரதல்ல குறுக்கு பாதையில் இன்றிரவு (22) பஸ்ஸொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 20 பேர்வரை காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ்ஸில் 40 பேர்வரை பயணித்துள்ளனர், 20 பேர்வரை காயம் அடைந்துள்ளனர் எனக் கூறப்பட்டாலும் இன்னும் உறுதியான எண்ணிக்கை தெரியவரவில்லை. 8 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்பது உறுதி.
காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
அதிக வேகம் மற்றும் சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
(செய்தி - ஆ.ரமேஷ், டி.சந்ரு, நானுஓயா நிருபர்)
Editor