கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம்!

கோப் குழு கூட்டங்கள் இடைநிறுத்தம்!

அனைத்து கோப் குழு கூட்டங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் குழுக் கூட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.