இலங்கையில் மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

இலங்கையில் மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

இலங்கையில் மலையக பெருந்தோட்ட சமூகத்தினருக்கான பட்டயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம் அரசாங்க முயற்சிகளுக்கு வழிகாட்டும் அடிப்படை ஆவணமாக வரையப்பட்டுள்ளது.

இது மலையக பெருந்தோட்ட சமூகத்தை பரந்த சமூக பொருளாதார கட்டமைப்பிற்குள் முழுமையாக ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடைய அரசாங்கத்திற்கு உதவுகிறது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, மேற்படிபட்டயத்தை அமுல்படுத்துவதன் மூலம், பெருந்தோட்ட சமூகம் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்து இலங்கைக்குள் சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.

அந்தவகையில், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மேற்படி பட்டயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.