வேலுகுமாருடன் இணைந்து வாக்கு கேட்க முடியாது ; கருத்து மோதல் முற்றியதால் விலகிய பரத்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவராக செயல்பட்டுவந்த பரத் அருள்சாமி இன்று அக்கட்சியில் வகித்த பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளார்.
கட்சியின் உயர்பீடத்தில் உள்ள முக்கிய நபருக்கும் பரத் அருள்சாமிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே அவர் கட்சியில் இருந்து விலக காரணமென அறிய முடிந்தது.
கண்டி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருடன் இணைந்து பொதுத் தேர்தலில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுமாறு இவரிடம் கோரப்பட்டுள்ளது.
அதற்கு முடியாதென பரத் அருள்சாமி தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் நிபந்தனைகளுக்கு கட்டுடுமாறும் இல்லாவிட்டால் விலகுமாறும் இவரிடம் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன் பிரகாரமே பரத் அருள்சாமி தமது பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
Editor