தாழ்தள பேருந்துகளை கொள்வனவு செய்ய  அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பு

தாழ்தள பேருந்துகளை கொள்வனவு செய்ய  அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பு

இலங்கையில் பொது போக்குவரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. 

அதன் பிரகாரம் தற்போது கொழும்பு உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் தாழ்தள பேருந்துகளை இயங்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 

அதன் முதல்கட்டமாக 600 பேருந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் 100 தாழ்தள  பேருந்துகளை கொள்முதல் செய்வதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு விலைமனுக்களை கோரியுள்ளது. 

மேலதிக விவரங்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (http://www.transport.gov.lk) அல்லது 0112-187213 என்ற தொலைபேசி மற்றும் தொலைநகல் மூலம் கிடைக்கும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.