மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 04 தினங்களான பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தாழ்நிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிராமங்களின் உள்வீதிகளிலும் மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் அன்றாட வாழ்க்கையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதிக மழை வீழ்ச்சி காரணமாக மட்டக்களப்பு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் அவ்வீதியுடனான போக்குவரத்தும், விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்னைக் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் அதன் வான் கதவுகள் அரை அடிக்கு மேல் சகலதும் திறக்கப்பட்டுள்ளதாக அக்குளத்திற்கும் பொறுப்பான நீர்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குளத்தை அண்டிய பகுதிகளான வவுன தீவு பிரதேசத்தில் தாழ்வான நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
Editor