கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்குவது சாத்தியமற்றது!

கச்சத் தீவினை  இந்தியாவுக்கு வழங்குவது என்பது சாத்தியமற்ற விடயமாகும். அவ்வாறு வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளங்கள் முற்று முழுதாகச் சூறையாடப்படும் நிலை ஏற்படும்.

கச்சத்தீவை இந்தியாவிற்கு வழங்குவது சாத்தியமற்றது!

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவினை மீண்டும் இந்தியாவிற்கு வழங்குவது என்பது சாத்தியமற்ற விடயம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ கச்சத் தீவினை  இந்தியாவுக்கு வழங்குவது என்பது சாத்தியமற்ற விடயமாகும். அவ்வாறு வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளங்கள் முற்று முழுதாகச் சூறையாடப்படும் நிலை ஏற்படும்.

எமது நாட்டில் கடந்த 17 ஆம் ஆண்டு இழுவைமடிப் படகு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய மீனவர்கள் இழுவைமடிப் படகினைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன் பிடி  நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுவதோடு, இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன. இதன்காரணமாக நமது மீனவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்” இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.