பேராதனை நகரில் மண்சரிவு : ஒருவர் பலி !

பேராதனை நகரில் மண்சரிவு : ஒருவர் பலி !

பேராதனை நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மண்சரிவினால்  4 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வர்த்தக நிலையமொன்றில் தங்கியிருந்த 68 வயதான நபரே இதன் போது உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பலாங்கொடை - பம்பஹின்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.